அட.., இத்தனை படங்களில் அஜித் செகண்ட் ஹீரோவாக நடித்திருக்கிறாரா..? இத கவனிச்சீங்களா..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் டாப் 5 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் அஜித் குமார். திரையில் அவர் வந்தாலே ரசிகர்கள் ஹிஸ்டீரியா வந்தது போல சன்னதம் ஆடுகிறார்கள். இத்தனைக்கும் அஜித் தன்னுடைய ரசிகர் மன்றங்களை எலலாம் கலைத்துவிட்டார். ரசிகர்களை சந்திப்பதையும் நிறுத்திவிட்டார்.

இன்று இவ்வளவு மாஸாக இருக்கும் அஜித் தன்னுடைய திரையுலக ஆரம்பகாலத்தில் தட்டு தடுமாறிதான் முன்னேறினார். பல படங்களில் செகண்ட் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்துள்ளார். அப்படி அவர் நடித்த படங்கள் பற்றிய ஒரு பார்வை.

   

ராஜாவின் பார்வையிலே– விஜய்யுடன் அஜித் இணைந்து நடித்த ஒரே படம் ராஜாவின் பார்வையிலே. இந்த படத்தில் ஹீரோ விஜய்யின் நண்பராக அஜித் நடித்திருப்பார். தன்னுடைய காதல் தோல்வியால் அஜித் தற்கொலை செய்துகொள்ள விஜய் அந்த பாதிப்பால் காதலில் விழமாட்டேன் என முடிவு செய்து உறுதியாக இருப்பார். அதன் பின்னர் அவர் காதலில் விழுவதும், அதன் பின்னர் அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும்தான் கதை

பாசமலர்கள் – அரவிந்த் சாமியோடு அஜித் இணைந்து நடித்த படம். இந்த படத்தில் அஜித் ஒரு கல்லூரி மாணவராக ஒரு சிறிய வேடத்தில் நடித்திருப்பார்.

கல்லூரி வாசல்– பிரசாந்தோடு இணைந்து அஜித் நடித்த திரைப்படம். கல்லூரி ஒன்றில் நடக்கும் கதை. பிரசாந்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் அஜித் இரண்டாவது ஹீரோவாக நடித்திருந்தார்.

பகைவன்– சத்யராஜோடு அஜித் இணைந்து நடித்த படம். இந்த படத்தில் அஜித் ஒரு நெகட்டிவ்வான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பாசிட்டிவ்வான ரோலில் சத்யராஜ் நடித்திருந்தார். குழந்தை ஒன்றை அஜித் கதாபாத்திரம் நடிக்க அந்த குழந்தையைக் காப்பாற்றும் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருப்பார்.

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்– விக்ரமன் இயக்கத்தில் கார்த்தி, ரோஜா நடித்த இந்த படத்தில் ஒரு பாசிட்டிவ்வான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நீ வருவாய் என – பார்த்திபன் நடித்த இந்த படத்தில் கதாநாயகியின் முன்னாள் காதலனாக அஜித் நடித்திருப்பார். விபத்து ஒன்றில் அவர் இறந்துவிடுவது போல உருவாக்கப்பட்டு இருக்கும்.

சாம்ராட் அசோகா – ஷாருக் கான் நடிப்பில் சந்தோஷ் சிவன் இயக்கிய இந்த படத்தில் அஜித் அசோகரின் தம்பியாக வில்லன் வேடத்தில் நடித்திருப்பார். இதுதான் அஜித் செகண்ட் ஹீரோவாக நடித்த கடைசி படம்.