Categories: சினிமா

‘உங்க ஐடியாலாம் ஓகே தான்.. ஆனா அதுக்கு அஜித் சரிப்பட்டு வருவாரா..?’ அஜித்தை வச்சி அந்த மாதிரி படம் பண்ண போகும் ஆதிக்…

Spread the love

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்பொழுது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, பிரியா பவானி ஷங்கர் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

வில்லனாக நடிகர் ஆரவ் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இப்படத்தில் நடிக்க நடிகர் அஜித்துக்கு 105 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.  இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜானில் கடந்த சில மாதங்களாக  நடைபெற்று  வந்தது. இந்நிலையில் நடிகர் அஜித்  அஜர்பைஜான் ஷூட்டிங்கை முடித்து விட்டு, சமீபத்தில் சென்னை திரும்பினார். இதைத்தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 64-வது படத்தில் கமிட்டாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளர்ந்து வருபவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் முதன் முதலில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ திரைப்படத்தை இயக்கினார். இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பகீரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார்.

சமீபத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கினார். இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இதைத்தொடர்ந்து நடிகர் அஜித்தை வைத்து இவர் இயக்கப்போகும் தல 64 திரைப்படத்தை பற்றி தான் தற்பொழுது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது இப்படத்தின் கதை எப்படி இருக்கும் என்றால் முழுக்க முழுக்க காமெடி நிறைந்த நகைச்சுவை படமாக எடுக்கப் போகிறாராம் ஆதிக்.  இதுவரை அஜித் நடிக்காத கேரக்டரிலும்,  சண்டைக் காட்சிகள் எதுவும் இல்லாமல் அஜித் அவருடைய ஸ்டைலில் காமெடி கொடுத்தால் எப்படி இருக்கும் ? என்று இயக்குனர் ஆதிக் புது முயற்சியை மேற்கொள்ள போகிறாராம். இதைக் கேள்விப்பட்ட தல ரசிகர்கள்’எங்க  ‘ தல ‘ அஜித்துக்கு இதெல்லாம் செட் ஆகுமா?’ என புலம்பி வருகின்றனர்.

Begam

Recent Posts

திகில் நிமிடங்கள்!… TV பார்த்து கொண்டிருந்த தம்பதி… நொடியில் வீட்டுக்குள் புகுந்த எமன்… கடைசியில் பெண் செய்த அந்த செயல்… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…

6 minutes ago

இனி நடக்காது!… NRI கணவர்களுக்கு அதிர்ச்சி… இந்தியாவில் கல்யாணம், வெளிநாட்டில் விவாகரத்தா?… முதல் மனைவியின் புகாரால் சிக்கிய நபர்… உச்ச நீதிமன்றம் அதிரடி…!!

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…

14 minutes ago

BREAKING: நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்… 4 நாட்களில் ரூ.4,500 குறைந்த தங்கம்… இன்றைய சவரன் விலை என்ன தெரியுமா?…!!

உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…

23 minutes ago

“உயிருடன் திரும்பி வருவாரா?”… திடீரென பாய்ந்த காட்டாற்று வெள்ளம்… அருவியில் நடந்த கோரம்… தமிழக இளைஞர் நிலை என்ன?…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…

31 minutes ago

திடீர் திருப்பம்!… ரூ.21 கோடி நகை கொள்ளை… சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்… போலீஸ் விசாரணையில் வெளியான பகீர் டுவிஸ்ட்…!!

மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலைப் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட பிரபல நகைக்கடையின் புதிய கிளையில் சுமார் 21…

40 minutes ago

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

3 மணத்தியாலங்கள் ago