அன்பு மனைவி ஷாலினிக்கு கேக் ஊட்டிவிடும் அஜித்.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ.. இது தான் விஷியமா..?

By Ranjith Kumar

Published on:

தமிழ் சினிமாவில் இன்றுள்ள வசூல் மன்னன்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் அஜித். அமராவதியில் ஆரம்பித்த அவரின் திரைப் பயணம் இன்று விடாமுயற்சியில் உச்சத்தைத் தொட்டுள்ளது. முதலில் காதல் படங்களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் தீனா உள்ளிட்ட படங்களுக்கு பிறகு ஆக்ஷன் ரூட்டுக்கு மாறினார்.

 

   

90 களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் பல காதல் படங்களில் நடித்து பெண்களின் ஆசைநாயகனாக இருந்தார். இடையில் அவர் சில காதல் கிசுகிசுக்களிலும் சிக்கினார். தன்னோடு இணைந்து நடித்த நடிகை அவர் காதலித்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின. இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சேர்ந்து சுத்துவதாகவும் கிசுகிசுக்கள் அப்போது பரவின. ஆனால் அந்த சமயத்தில், அதை அஜித் ஒரேடியாக முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

அப்போதுதான் அமர்க்களம் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஷாலினி மீது அஜித் காதல் வசப்பட்டு அவரிடம் ப்ரபோஸ் செய்தார். ஷாலினியும் அவர் குடும்பமும் சம்மதித்த பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகின்றனர். தற்போது 24 வருடம் கடந்த பின்னும் அஜித்துக்கு ஷாலினி மேல் ஒவ்வொரு நாளும் காதல் அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது தவிர, துளி கூட காதல் குறையாமல் ஷாலினி பார்த்து வருகிறார்.

இவர் ஆரம்பகால கட்டத்தில் இருந்து தற்போது வரை சினிமாக்களில் நடிப்பதை எவ்வளவு முக்கியமாக பார்த்து வருகிறாரோ, அந்த அளவிற்கு ஒரு படி மேலாக ஷாலினி மேல் வைத்திருக்கும் காதல் எப்போதும் அதிகமாக தான் இருந்துள்ளது. தன் காதலியும் மனைவியும் ஆன ஷாலினி அவர்களை எந்த இடத்திலும் ஒருபோதும் விட்டுக் கொடுத்துப் போகவே மாட்டார். இரண்டாயிரத்தில் திருமணம் ஆகி தற்போது வரை அஜித் ஷாலினியை சந்தித்த நாளை கொண்டாடுவதை மறக்கவே மாட்டார்.

தற்போது அது போல் தான் ஷாலினி அவர்களிடம் அஜித் முதன்முதலாக ப்ரபோஸ் செய்த நாளை கொண்டாடும் விதமாக நேற்று இரவு சமயத்தில் தன் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தார் முன் வைத்து கேக் வெட்டி ஷாலினி சர்பை செய்துள்ளார். அஜித் தன் மனைவிக்கு கேக் ஊட்டி விட்டு அந்த நிகழ்வை மறக்க முடியாத அளவிற்கு செய்துள்ளார். தற்போது அஜித் தன் மனைவிக்கு செய்த சர்ப்ரைஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் அஜித் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

author avatar
Ranjith Kumar