டைட்டில் கார்டுல “மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் ” என போட்டு… சீக்கிரம் ஜனநாயகன் படத்தை ரிலீஸ் பண்ணுங்கடா… விஜய் பட இயக்குநரின் மாஸ் பிளான்..!!

By Soundarya on வைகாசி 4, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து ஒரு அதிரடியான கோரிக்கையை முன்வைத்துள்ளார். விஜய்யின் அரசியல் எழுச்சியைக் கொண்டாடும் விதமாக, “மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் சி. ஜோசப் விஜய்” என்று டைட்டில் கார்டு போட்டு அந்தப் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த பொங்கல் பண்டிகையின்போது மிஸ் ஆன கொண்டாட்டங்களை, இந்த வெற்றியை முன்னிட்டு இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப் போவதாகவும் அவர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.

இயக்குநரின் இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ஏற்கனவே இப்படம் சென்சார் விவகாரங்களால் வெளியாவதில் சிக்கல் நீடித்து வந்த நிலையில், தற்போது விஜய் முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள சூழலில் இத்தகைய டைட்டில் கார்டுடன் படம் வெளியானால் அது வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ‘ஜனநாயகன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.