அய்யா தான் எல்லாமே… திடீரென அந்தர் பல்டி அடித்த அன்புமணி… யாரும் எதிர்பார்க்காத செம டுவிஸ்ட்…!

By Nanthini on மார்கழி 5, 2025

Spread the love

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் கூட்டணி வியூகம் மற்றும் தொகுதி பங்கீடு என பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன. சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகள் வரை மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனிடையே பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் தலைமை போட்டி நாளுக்கு நாள் மிகப்பெரிய சண்டையாகவே மாறி உள்ளது. ராமதாஸ் தன்னுடைய பேரன் முகுந்தனுக்கு கட்சியின் இளைஞரணி தலைவர் பதவி வழங்கியதை அன்புமணி கடுமையாக எதிர்த்திருந்தார். இவர்கள் இருவரின் சண்டை பொது மேடைகளில் வெடித்தது.

இதனைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்குவதும், ராமதாஸ் அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்குவதும் என பல நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறிவிட்டது. இறுதியாக அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கினார். ஆனால் அன்புமணி தான் தலைவர் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பளிக்க ராமதாஸ் ஆத்திரமடைந்தார். இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில் பாமகவின் மாம்பழ சின்னமும் நேற்று முடக்கப்பட்டது. மேலும் அன்புமணி தான் தலைவர் என்று தேர்தல் ஆணையம் கூறியதை மறுக்க முடியாது என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

   

இவ்வாறு இவர்களுக்கு இடையேயான சண்டை தொடர்ந்து கொண்டே போகும் நிலையில் அன்புமணி ராமதாஸ் பக்கம் சாய்வதுபோல ஒரு கருத்தை கூறியுள்ளார். அதாவது அன்புமணி தன்னுடைய சொந்த ஊரில் குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்த பிறகு ஐயா இல்லை என்றால் யாரும் இல்லை, அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி, சமூக நீதி என்றால் ஐயா. கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பல்வேறு விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படுவதற்காக பாடுபட்டவர். பின்தங்கி நிலையில் இருப்பவர்கள் சுயமரியாதையோடு இருப்பதற்காகத்தான் மருத்துவர் ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கினார் என்று கூறி அன்புமணி கண் கலங்கினார். இவருடைய இந்த பேச்சு பாமக ஒன்றிணைப்பதற்கான அறிகுறி என்ன அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றன.