சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடைசியாக லால் சலாம் படத்தை இயக்கினார். இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்தனர். லால் சலாம் படம் கிரிக்கெட் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவு படம் வெற்றி பெறவில்லை.

ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷை வைத்து 3 திரைப்படத்தை இயக்கினார். படம் ரிலீஸ் ஆன நேரம் சரியாக பேசப்படவில்லை என்றாலும் தற்போது வரை 3 படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் அடுத்த படத்திற்கு சித்தார்த் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி படத்தில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு தனுஷ், ஐஸ்வர்யா தம்பதியினர் இருவரும் ஒருவரையொருவர் பிரிவதாக மனப்பூர்வமாக அறிவித்தனர். தனுஷ் ஐஸ்வர்யா தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

விவாகரத்து பற்றி அறிந்த ரசிகர்கள் தனுஷ், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என கருத்து தெரிவித்து வந்தனர். இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு 42 வயது ஆகிறது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தனது உடல் ஆரோக்கியத்திலும் இப்போது அக்கறை செலுத்தி வருகிறார். ஐஸ்வர்யா ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
