அப்பாவை வச்சு செஞ்சது பத்தாதுன்னு பிரபல நடிகரை வைத்து இயக்கும் ஐஸ்வர்யா.. வெளியான அடுத்த படம் அப்டேட்!..

By Ranjith Kumar

Published on:

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த அவர்கள் சிறப்பு வேடத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்த வெளிவந்த படம் தான் “லால் சலாம்”, இப்படம் பெரிதளவு திரையில் ஓடவில்லை, இப்படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு தோற்றத்தில் வருகிறார் என்று தெரிந்தவுடன் ரஜினியின் ரசிகர்கள் மிக எதிர்பார்ப்புடன் இப்படத்திற்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு அளவிற்கு மேல் இப்படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோ என்பதை மறக்கும் அளவிற்கு ரஜினியை வைத்து படத்திற்கு மேலும் மேலும் பிரமோஷன் செய்து கொண்டே இருந்தார்கள், அதன் பின்வாராக ரஜினி அவர்கள் தான் இப்படத்தின் முழு கதையை தாங்க போகிறார் என்ற அளவுக்கு ரசிகர்கள் நம்ப ஆரம்பித்து விட்டார்கள், அதனால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது படம் 100 கோடிக்கும் மேல் எளிதாக வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்தது, ஆனால் இப்படம் வெளிவந்த முதல் நாளிலேயே இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்து குவிய ஆரம்பித்துவிட்டது.

   

இப்படத்தின் பட்ஜெட்டை வசூல் ரீதியாக தொடுவதே பெரிய கஷ்டம் என்ற அளவுக்கு படத்தின் நிலைமை ஆகிவிட்டது, ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பும் இப்படத்தில் பெருதளவு வைக்கப்பட்டதால் மிக வருத்தத்துடன் ரசிகர்கள் இப்படத்தை பற்றி விமர்சிக்க ஆரம்பித்தார்கள். இதற்கு முன்னதாக “கோச்சடையான்” என்ற படத்தை “சௌந்தர்யா ரஜினிகாந்த்” தன் அப்பாவை வைத்து இயக்கிய வெளியிட்டு இருந்தார், இப்படமும் எதிர்பார்த்த அளவு போகவில்லை, இந்தியாவிலே முதல் முறையாக அனிமேஷன் மூலமாக ஒரு படத்தை உருவாக்குகிறேன் என்று பெரும் பிரமோஷன் செய்தார்.

ஆனால் இப்படம் முழுக்க முழுக்க தோல்வியடைந்து ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டும் தான் மிஞ்சியது, அதே போல் தான் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர் ரஜினிகாந்த் அவர்களின் லால் சலாம் படமும் தோல்வியை தழுவியது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இதற்க்கு முன்னால் தனது கணவர் “தனுஷ்” அவர்களை வைத்து “3” படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை கண்டறிந்தார், அதேபோல் இப்படத்தையும் கருதப்பட்டது, ஆனால் விமர்சன ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் மூலமும் படம் சரிவை தான் கண்டது,

இதற்கு அடுத்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் “சித்தா” படத்தில் மூலம் திரையில் வெகுவிரைவாக மக்கள் மனதை இடம் பிடித்த “சித்தார்த்” அவர்களின் வைத்த படம் இயக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இதை கண்ட ரசிகர்கள் தந்தை ரஜினியை வைத்து செஞ்சது போதாது என்று இப்போ சித்தார்த்தவர்களை வைத்து படம் இயக்குகிறாரா என்று பலரும் பலவிதமாக விமர்சனங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

author avatar
Ranjith Kumar