சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது, நான் இளம் வயதில் சினிமா வாய்ப்புகளை தேடிக் கொண்டு இருந்தேன். அப்போது ஒருநாள் எனது சகோதரனுடன் ஒரு படத்தின் ஆடிசனுக்கு சென்றேன். அங்கு இருந்த போட்டோகிராபர் எனது சகோதரனை வெளியே அமர வைத்துவிட்டு என்னை அங்கிருந்த தனி அறைக்குள் அழைத்து சென்றார்.
என்னிடம் பிகினி உடையை கொடுத்து இந்த உடையில் உன்னை பார்க்க வேண்டும். இதை அணிந்துக்கொண்டு வா என்றார். அந்த சமயத்தில் எனக்கு சினிமா பற்றிய புரிதல் பெரிதாக இல்லை. அப்படிதான் அப்போது வாழ்க்கை போய்க்கொண்டு இருந்தது. ஏதோ எனக்கு தவறாக பட்டதால் எனது சகோதரனிடம் அனுமதி கேட்க வேண்டும் என்று சொல்லிவிட்டு அந்த அறையில் இருந்து உடனே வெளியே வந்துவிட்டேன்.
எத்தனை பெண்களை அவன் இந்த மாதிரி செய்தான் என்று தெரியவில்லை. அப்போது நடந்ததை என் தம்பியிடம் சொல்லும் அளவுக்கு எனக்கு அப்போது தைரியமும் இல்லை. ஒரு முறை நான் லேட்டாக வந்தேன் என்பதற்காக துணை நடிகர்கள் முன்பு இயக்குனர் என்னை வேண்டுமென்றே கண்டபடி திட்டினார். பல நடிகைகளுடன் ஒப்பிட்டுப் பேசினார். தவறு செய்தாலும் யாரையும் இந்த மாதிரி அசிங்கப்படுத்தக் கூடாது என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருக்கிறார்.
கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளுக்குப் பொதுமக்கள் சுயமாகப் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க…
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி இறுதியில்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், அந்நாட்டில் பெருநிறுவனங்களுக்கான வரி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடி வரிச்…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம்…
பெங்களூரில் காதலை வெளிப்படுத்துவதாகக் கூறி, காதலனை வீட்டிற்கு வரவழைத்து தீயிட்டு எரித்துக் கொன்ற இளம்பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, டார்ஜிலிங் மாவட்டம் குர்சியோங் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர்…