ஆஸ்திரேலியாவில் helicopter ride சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஐஸ்வர்யா தத்தா… செமயா இருக்கே இந்த வியூ… .வெளியான லேட்டஸ்ட் வீடியோ…

By Begam on ஆவணி 9, 2023

Spread the love

தமிழில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அதனை தொடர்ந்து பாயும் புலி, சத்ரியன், ஆறாது சினம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் நடித்த எந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவில்லை.

   

இதைத்தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் மூலம் மக்களிடையே பெரும் பிரபலமானார். அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் அவரது சில செயல்களால் ரசிகர்களின் மோசமான விமர்சனத்திற்கும் ஆளானார். தற்பொழுது இவர் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

   

 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இவரை பற்றிய அறிமுகமே நமக்கு தேவையில்லை. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தனர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பர்ஹானா திரைப்படம் கலவையான விமரசனங்களை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர்கள் இருவரும். தற்பொழுது இந்த இரு நடிகைகளும் ஆஸ்திரேயாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு அவர்கள் helicopter ride சென்ற வீடியோவை இணையத்தில் பகிர, இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Tamilan Media (@tamilan_media_)