Connect with us

அந்த நடிகருடன் நடிப்பதற்காக 3 படங்களை உதறித்தள்ளிய ஐஸ்வர்யா லக்ஷ்மி.. ரொம்ப ரிஸ்க் எடுக்குறீங்க பூங்குழலி..

CINEMA

அந்த நடிகருடன் நடிப்பதற்காக 3 படங்களை உதறித்தள்ளிய ஐஸ்வர்யா லக்ஷ்மி.. ரொம்ப ரிஸ்க் எடுக்குறீங்க பூங்குழலி..

 

விஜய் சேதுபதி மற்றும் திரிஷா அவர்களின் இயல்பான நடிப்பில் பிரேம் இயக்கத்தில் ஒட்டுமொத்த திரையரங்கும் காதலில் மயங்கிப் போன படம் தான் “96”, இப்படம் வெளியான பிறகு தான் காதலிப்பவரின் கண்ணோட்டமே மாறியது என்று கூறலாம், காதல் என்றால் ஒருவர் மீது ஒருமையில் காதலிப்பது தான் என்று இப்படம் தெளிவாக விளக்கியது.

தற்போது இப்பட இயக்குனர் பிரேம் அவர்களின் மனைவியான ரித்திகா பிரேம் அவர்கள், பொன்னின் செல்வன் படத்தில் பூங்குழியாகவும், கட்டா குஸ்தி படத்தில் பெண் போராளியாகவும் நடித்த பிரபலமான ஐஸ்வர்யா லட்சுமி அவர்களை வைத்து படம் இயக்க உள்ளதாக தெரிவித்திருந்தார், இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கார் ரேசர் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம், அதற்காக ரியல் கார் ரேஸ் ஓட்டும் நபரை போல் பயிற்சி எடுத்து வருகிறாராம். ஆனால் தற்போது ஐஸ்வர்யா லட்சுமி அவர்கள் மிகப்பெரிய இயக்குனர் இயக்கும் மாபெரும் படத்திற்காக இப்படத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அப்படத்திற்காக தனது கால்ஷீட் தந்திருக்கிறாராம்,

   

இயக்குனர் மணிரத்தினமும் கமல்ஹாசனும் பல வருடங்கள் கழித்து இணைந்து இவர்கள் படைப்பில் உருவாகும் “thug life” படத்திற்காக ஐஸ்வர்யா லட்சுமி அவர்கள் ரித்திகா பிரேம் இயக்கத்தில் வரும் படத்தை கைவிட்டு விட்டாராம், இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிப்பதற்காக இன்னும் மூன்று படங்களை கைவிட்டு இருக்கிறாராம், தளபதி விஜயை வைத்து டைம் டு லீட் என்று பெரும் பேசும் பொருளாக ஆன “தலைவா” என்ற அரசியல் படத்தை கொடுத்த A.L விஜய் அவர்கள் படத்தையும், ஐஸ்வர்யா லட்சுமி வைத்து இயக்குனர் மெய்யழகன் இயக்கும் படத்தையும் உதறிவிட்டு, மாபெரும் படமான மணிரத்தினம் கமல்ஹாசன் நடிக்கும் “Thug life” படத்திற்காக வரும் படங்கள் அனைத்தும் ஒதுக்கி வைத்து இப்படத்தில் முழுமையாக இறங்கி விட்டாராம்.

author avatar
Ranjith Kumar
Continue Reading
To Top