இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. அதேசமயம் புதுப்புது திட்டங்கள் பயனாளர்களின் வசதிக்கு ஏற்றவாறு அறிமுகப்படுத்தப்படுகிறது. இப்படியான நிலையில் OTT சப்ஸ்கிரிப்ஷன் உடன் airtel பல ரீசார்ஜ் திட்டத்தை வழங்கி வருகிறது. அதன்படி 181 ரூபாய் திட்டத்தில் 30 நாட்களுக்கு 15 gp டேட்டா, Sony live, loinsgate play, Hoichoi, Sun NXT உட்பட 22க்கும் மேற்பட்ட OTT சந்தா கிடைக்கும்.
அதுவே 271 ரூபாய் திட்டத்தில் ஒரு மாதத்திற்கு தினமும் ஒரு ஜிபி டேட்டா, Netflix Basic, Zee5 Premium, Jio hotstar ஆகிய சேவைகளை பெறலாம். அடுத்து 399 ரூபாய் திட்டத்தில் 28 நாட்களுக்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா, ஜியோ ஹாட்ஸ்டார் இலவசமாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
