என்ன கொடுமை சார் இது..? டிக்கெட் வாங்கியே தீரணுமா..? – பயணிகள் அமரும் இடத்தில் தண்ணீர் ஊற்றிய ஏர்போர்ட் ஊழியர்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!

Spread the love

மும்பை சர்வதேச விமான நிலையத்தின் வருகை பகுதியில், பயணிகள் அமர்வதைத் தடுப்பதற்காக அங்கிருந்த திண்டுகள் மீது தூய்மைப் பணியாளர் ஒருவர் தொடர்ந்து தண்ணீரை ஊற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிக அளவிலான விமான நிலையக் கட்டணம் மற்றும் வரிகளைச் செலுத்தும் பொதுமக்களிடம், இப்படி அநாகரீகமான முறையில் நடந்துகொள்வது முறையற்றது என அங்கிருந்த பயணி ஒருவர் ஊழியரை நேரில் தடுத்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆரம்பத்தில் ஊழியர் இதற்குப் பதிலளிக்கத் தயங்கினாலும், பின்னர் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் தான் இவ்வாறு செய்வதாக ஒப்புக்கொண்டார். பொதுமக்கள் அந்த திண்டுகளில் அமர்ந்து அந்த இடத்தை அசுத்தம் செய்வதைத் தடுக்கவே இந்த விசித்திரமான வழிமுறை கையாளப்பட்டதாக விமான நிலையத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அமர்வதற்குப் போதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமல், ‘பேண்ட்டை நனைக்கும்’ இத்தகைய மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபடுவதா என்று அந்தப் பயணி வீடியோவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இணையவாசிகளிடையே இருவேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. ஒரு தரப்பினர் விமான நிலைய நிர்வாகத்தின் இந்த விசித்திரமான செயலைக் கண்டித்தாலும், மற்றொரு தரப்பினர் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாகப் பேசுகின்றனர். படித்த மேல்தட்டு மக்கள் என்று தங்களை நினைத்துக் கொள்பவர்கள் அங்கு அமர்ந்து கொண்டு எச்சில் துப்புவது, பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை எறிந்து பொது இடத்தை அசுத்தப்படுத்துவதாலேயே, தூய்மையைப் பராமரிக்க ஊழியர்கள் இத்தகைய தீவிரமான முடிவை எடுக்க வேண்டியுள்ளது என்று பொதுமக்களின் பொதுநல உணர்வற்ற போக்கையும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

Swetha

Recent Posts

“தலைவரு நிரந்தரம்…! 5 நாட்களில் விஜய்யின் சாதனையை தகர்த்தெறிந்த ஜெயிலர் 2… இணையத்தை அதிரவைக்கும் லேட்டஸ்ட் சினிமா அப்டேட்…!!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படம், வெளியான 5…

6 minutes ago

அஜித் ஏன் இப்படி மாறினார்…? வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்… பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பரபரப்பு பேட்டி…!!

மறைந்த பிரபல இசையமைப்பாளர் தேவாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நடிகர் அஜித் நேரில் வரவில்லை என்பதும், இரங்கல் கூடத் தெரிவிக்கவில்லை…

14 minutes ago

“அண்ணன் நெத்தியை பார்த்தீங்களா…? கூல் சுரேஷுக்கு திருநீறு பூசிய திருமாவளவன்…! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி… வைரலாகும் போட்டோ…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், சென்னை ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் இணைந்து ஆயுத…

36 minutes ago

“நான் அவளோட அண்ணன்…” போலி போட்டோ… வலையில் சிக்கிய பெரிய புள்ளிகள்… ரூ.25 லட்சத்திற்கு மேல் வாரி சுருட்டிய வாலிபர்…. பகீர் பின்னணி…!!

ஹைதராபாத்தில் பெண்களின் பெயரில் போலி சோஷியல் மீடியா கணக்குகளை உருவாக்கி, ஆண்களை வசீகரித்து ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பெற்று…

1 மணத்தியாலம் ago

“நெருங்கி வந்து ஆடையை கிழித்து…” பிரிட்டிஷ் சுற்றுலா பயணியிடம் அத்துமீறிய நபர்… நள்ளிரவில் பதற்றம்… பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலம் வர்க்கலா பகுதியில் நள்ளிரவில் உணவருந்திவிட்டுத் திரும்பிய பிரிட்டிஷ் சுற்றுலாப் பெண் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அவரது…

2 மணத்தியாலங்கள் ago

“என்கவுண்டர் செய்தால் தான் உடலை வாங்குவோம்”… போலீஸ் அலட்சியமா?.. தூக்கிட்டு வீசப்பட்ட சடலம்… கதறும் குடும்பம்… உச்சகட்ட பதற்றம்…!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, பணி முடிந்து வீடு திரும்பியபோது மாயமான உத்திரா என்ற 26 வயது இளம் செவிலியர்,…

2 மணத்தியாலங்கள் ago