அதிர்ச்சி வீடியோ..! புறப்பட்டு 3 நிமிடங்களில் ஏர் இந்திய விமான விபத்து… வெளியான விபத்து காட்சி..!!

By Soundarya on ஆனி 12, 2025

Spread the love

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே போயிங் 787 ரக சேர் இந்திய விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிலையில் விமானம் கீழே விழுந்து கொழுந்து விட்டு எரியும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி காண்போரை பதற வைத்துள்ளது. இந்த விமானம்  அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. ஆனால் விமானம் புறப்பட்ட 3 நிமிடத்திலேயே 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேகானி நகரில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது.

விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய இந்த விமானத்தில் 242 பயணிகள் இருந்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. பயணிகளின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. விமானத்தில் 230 பயணிகள் 2 பைலட்டுகள் உட்பட 10 ஊழியர்கள் இருந்துள்ளார்கள். இந்நிலையில் விமானம் கீழே விழும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.