லண்டனில் இருந்து மும்பைக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் AI-130 இல், ஐந்து பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 11 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியுள்ளது. இதனால் போயிங் 777 விமானம் மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு அங்கு மருத்துவக் குழுக்கள் உடனடி சிகிச்சை அளித்துள்ளார்கள்.
அவர்களின் உடல்நிலை சீரான பிறகு அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுகுறித்து ஏர் இந்தியா கூறுகையில், “எங்கள் விமான ஊழியர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம், மேலும் சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்குகிறோம். இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருகிறது, மேலும் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. food poison காரணமாக இது நடந்திருக்கலாம்” என்ற கூறியுள்ளது. 11 பேர் வரை பாதிக்கப்பட்டதாகக் கூறினாலும், ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை ஏழு பேர் எனத் தெரிகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…