ஐயோ… கல்லூரிக்குச் சென்ற மாணவன்… 23 வருடங்களுக்குப் பின்… நடமாடும் பிணமாக வீடு திரும்பிய கொடூரம்…!

By Swetha on கார்த்திகை 10, 2026

Spread the love

நிசார்-உத்தீன் அகமது என்ற 19 வயது மருந்தியல் மாணவர், 15 ஜனவரி 1994 அன்று கர்நாடகாவின் குல்பர்காவில் உள்ள தன் வீட்டிலிருந்து கல்லூரிக்குக் கிளம்பினார். தேர்வு வர இன்னும் 15 நாட்களே இருந்த நிலையில், அவர் கல்லூரிக்குச் செல்லவில்லை. ஹைதராபாத் காவல் துறையினர் அவரை வீட்டின் அருகே ரகசியமாகக் கைது செய்தனர். இதுகுறித்து கர்நாடக காவல்துறைக்குத் தெரிவிக்கப்படாததால், ஆறு வாரங்களாக அவரது குடும்பத்தினருக்கு அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை.

அவர் மீது 1993 டிசம்பரில் கோட்டா, ஹைதராபாத், சூரத், கான்பூர் மற்றும் மும்பை ரயில் குண்டுவெடிப்புகளில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டது. போலீஸ் காவலில் அவரிடம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலமே முதன்மை ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டது. ‘தடா’ சட்டத்தின் கீழ் இந்த வாக்குமூலம் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மகனின் விடுதலைக்காகத் தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்த அவரது தந்தை நூர்-உத்தீன் அகமது, போராடியே 2006-ல் காலமானார்.

   

கடந்த 11 மே 2016 அன்று உச்ச நீதிமன்றம் நிசார்-உத்தீனின் குற்றச்சாட்டுகளை ரத்து செய்து, அவரை விடுவிக்க உத்தரவிட்டது. தன் 43-வது வயதில் ஜெய்ப்பூர் சிறையிலிருந்து வெளியே வந்து, 23 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பிய அவர், “23 ஆண்டுகளுக்குப் பிறகு நான் சுதந்திரமாக இருக்கிறேன். ஆனால், இப்போது நீங்கள் பார்ப்பது ஒரு நடமாடும் பிணத்தைத்தான்” என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.