இனி சென்னை அதிமுகவின் கையில்?… 3 தொகுதிகளில் 3 பெண்களுக்கு வாய்ப்பு… எடப்பாடியின் இந்த மூவ்-ஆல் அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!!!

By Rajeshwari on பங்குனி 26, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வரும் நிலையில், சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 13 தொகுதிகளில் அதிமுக நேரடியாகப் போட்டியிடுகிறது. இதில் குறிப்பாக மூன்று தொகுதிகளில் பெண் வேட்பாளர்களைக் களமிறக்க அக்கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஆயிரம் விளக்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் வளர்மதியும், அண்ணா நகர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும் போட்டியிட உள்ளனர். மேலும், திருவிக நகர் தொகுதியில் மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி அதிமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

இந்தத் தேர்தலில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பழைய முகங்களுக்கும் புதியவர்களுக்கும் சமமான வாய்ப்பளிக்கும் வகையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்துள்ளார். ராயபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார்.

   

மேலும் வேளச்சேரி, விருகம்பாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட முக்கிய தொகுதிகளிலும் அதிமுக தனது வேட்பாளர்களை இறுதி செய்துள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை எதிர்கொள்ளும் வகையில், மகளிர் வாக்கு வங்கியைக் கவரும் நோக்கில் இந்த பெண் வேட்பாளர்களின் தேர்வு அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.