அதிமுக 210 தொகுதிகளிலும் நிச்சயம் வெல்லும்… அடித்து சொல்லும் எடப்பாடி பழனிச்சாமி..!!

By Soundarya on புரட்டாதி 8, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.  இதற்கிடையில் அதிமுகவில் பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில் PTI நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி, “2026 தேர்தலில் அதிமுக-திமுக  இடையேதான் போட்டி .

அதிமுக 210 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட, அதிமுக ஆட்சியின் நலத் திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவோம் என்றார். மேலும், வெளிநாடு சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.