தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக அதிமுக மற்றும் திமுக கட்சிகள் மக்களை சந்திக்கும் வேலையில் தீவிரம் காட்டி வருகின்றன. மத்திய அரசு அமல்படுத்திய SIR பணிகள் ஒரு பக்கம் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு தலைமை போட்டி ஆரம்பித்தது. இந்த சண்டை மேலும் தீவிரமடைந்து கொண்டே சென்றதால் அன்புமணி ராமதாஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து தேர்தல் ஆணையம் சென்று அன்புமணிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் தலைமை போட்டி அதிகரித்து வரும் வேலையில் வேட்புமனையில் கையெழுத்திடுவது யார் என்பதில் பிரச்சனை ஏற்படும். இதனால் மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது. இவ்வாறு பாமகவில் தொடர்ந்து பிரச்சனை வருவதால் அக்கட்சி யாருடையது என்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. மேலும் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற விவாதமும் தற்போது நடைபெற்ற வந்த நிலையில் அன்புமணி அதிமுகவிற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதால் அவர் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் பாமகவின் செய்தி தொடர்பாளர் பாலு தற்போது அன்புமணி பக்கம் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பாமக சார்பில் போராட்டம் நடத்துவதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தப் போராட்டத்திற்கான முதல் அழைப்பு அதிமுகவிற்கு விடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
ஏற்கனவே பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பை ஜெயந்த் பாண்டா அன்புமணியை சந்தித்து பேசியது கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்த்த சமயத்தில் பாலுவின் செயல்பாடும் தற்போது அதனை உறுதி செய்துள்ளது. தேர்தல் ஆணையம் அன்புமணியை தலைவர் என்று அங்கீகரித்ததால் இபிஎஸ் ராமதாசை கண்டு கொள்ளவில்லை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…