BIG BREAKING: இரண்டாக உடைந்தது அதிமுக… அதிகாரபூர்வ தகவல்..!!

By Soundarya on வைகாசி 11, 2026

Spread the love

அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி தொடர்பாக அக்கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. 30 எம்.எல்.ஏ-க்கள் இணைந்து சட்டமன்றக் கட்சித் தலைவராக எஸ்.பி. வேலுமணியையும், துணைத் தலைவராக சி.வி. சண்முகத்தையும், கொறடாவாக சி. விஜயபாஸ்கரையும் நியமிக்கக் கோரி சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக, எடப்பாடி பழனிசாமியை (EPS) சட்டமன்றக் கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என 17 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே ஆதரவு கடிதம் வழங்கியிருந்தனர். பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் வேலுமணிக்கு ஆதரவாகத் திரும்பியுள்ளதால், அதிமுக அதிகாரப்பூர்வமாக இரண்டு அணிகளாக உடைந்துள்ளதும், கட்சியில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளதும் இதன் மூலம் உறுதியாகியுள்ளது.