தமிழகத்தில் தேர்தல் களம் நொடிக்கு நொடி பரபரப்பாக இருக்கும் நிலையில் அனைத்துக் கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பயணம் 2026 தேர்தல் களத்தை பரபரப்பாக மாற்றி உள்ளது. அதிமுகவில் தொடர்ந்து உட்கட்சி பிரச்சனை நிலவிவரும் நிலையில் சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய அடுத்த கட்ட நகர்வு அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
இந்நிலையில் செங்கோட்டையனை வைத்து இன்னும் சில அதிமுக சீனியர்களுக்கு தமிழக வெற்றிக்கழகம் வலைபேசி இருப்பதாக கூறப்படுகிறது. அதில் பொள்ளாச்சி ஜெயராமன், வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன் தற்போது சிக்கி உள்ளனர். இவர்களுடன் தொடர் பேச்சு வார்த்தையில் தமிழக வெற்றி கழகம் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இவர்கள் தமிழக வெற்றி கழகம் கட்சிக்குச் சென்றால் அதிமுக ஒருங்கிணைப்புக்கு மேலும் பின்னடைவு வரும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
