அதிமுக-வில் அடுத்த விக்கெட்?…. 4 MLA-க்கள் ராஜினாமா பின்னணியில் EPS… சட்டப்பேரவை இறக்கிய ‘ஆப்பு’…. தமிழக அரசியலில் பரபரப்பு….!

By Nanthini on ஆடி 26, 2026

Spread the love

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா விவகாரம் தொடர்பாக மேல்விசாரணை நடத்துவதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக, தனது பதவியை ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ-க்களான இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார் மற்றும் சத்தியபாமா ஆகியோரிடம் பேரவைச் செயலகம் சார்பில் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இதுகுறித்த கூடுதல் தகவல்களையும் தெளிவுகளையும் பெறுவதற்காக முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமியையும் சேர்த்து ஐந்து பேரையும் நேரில் ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி வரும் 30-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த விசாரணையில், குறிப்பிட்ட நால்வருடன் எடப்பாடி பழனிசாமியிடமும் தனித்தனியாக தலா அரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட உள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.