எடப்பாடிக்கு ஷாக்..! ஸ்டாலினுக்கு ஹேப்பி… திமுகவில் இணைந்த அதிமுகவினர்… தட்டி தூக்கிய K.S மூர்த்தி…!!

By Soundarya on ஐப்பசி 26, 2025

Spread the love

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக மீண்டும் தங்கள் ஆட்சியை நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது.  இதற்காக 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெல்ல வேண்டும் என்ற ஸ்டாலின் ஆணையை நிறைவேற்ற திமுகவினர் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு அடித்தளம் போடும் விதமாக மாற்றுக்கட்சியினரை திமுகவில் இணைக்கும் பணி வேகமெடுத்துள்ளது. இந்த நிலையில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் K.S.மூர்த்தி முன்னிலையில், அதிமுகவை சேர்ந்த பலர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர்.