தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தற்போது தீவிரமாக தேர்தல் பணிகளில் களமிறங்கியுள்ளன. குறிப்பாக திமுக தற்போது ஆட்சியில் உள்ள நிலையில் மீண்டும் தமிழகத்தில் தங்களுடைய ஆட்சி தான் அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதால் அதற்கான வேலைகளை முதல்வர் ஸ்டாலின் தனது கட்சி நிர்வாகிகளை வைத்து செய்து வருகின்றார். அதேசமயம் திமுகவின் கூட்டணியையும் பலப்படுத்தும் முயற்சியில் ஸ்டாலின் களம் இறங்கியுள்ளார்.
இப்படியான நிலையில் அதிமுக கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தை 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக பக்கம் கொண்டுவர வேண்டுமென்று செந்தில் பாலாஜிக்கு முதல்வர் ஸ்டாலின் அசைன்மென்ட் கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் புதியவர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தார். இப்படியான நிலையில் அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் அந்தக் கட்சியிலிருந்து விலகி செந்தில் பாலாஜி முன்னிலையில் நேற்று திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர்.
