“ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000″…. அதிமுக-வின் 3-வது கட்ட வாக்குறுதி…. EPS அடுத்த அறிவிப்பு….!

By Nanthini on பங்குனி 17, 2026

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, எதிர்வரும் தேர்தலுக்காக ‘குலவிளக்கு’ திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் ரூ.2,000, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 சிறப்புத் தொகை மற்றும் ரூ.1,000 பொங்கல் பரிசு உள்ளிட்ட அதிரடியான வாக்குறுதிகளை மூன்று கட்டங்களாக அறிவித்து அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

எளிய மக்களையும் குடும்பத் தலைவிகளையும் இலக்காகக் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், முழுமையான தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும், அதில் மேலும் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அதேசமயம், கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், மிக விரைவில் இறுதி முடிவெடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.