தமிழக அரசியலில் அதிரடி..! திருமாவளவனை முதல்வராக்க அதிமுக – திமுக ரகசிய திட்டம்..? சி.வி.சண்முகம் வெளிப்படுத்திய பகீர் தகவல்..!!

By Soundarya on வைகாசி 13, 2026

Spread the love

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக்கும் அரிய வாய்ப்பு ஒன்று உருவானதாகக் குறிப்பிட்டுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்கலாம் என திமுக தரப்பில் முன்மொழியப்பட்டதாகவும், திமுகவுடன் கூட்டணி வைக்க விருப்பமில்லாத போதிலும், திருமாவளவனுக்காக அந்தத் திட்டத்திற்குத் தாங்கள் சம்மதம் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வாய்ப்பைத் தமிழகத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகக் கருதியதாகவும், யாரும் சிந்தித்துப் பார்க்காத இத்தகைய முடிவை எடுக்கத் தயாராக இருந்ததாகவும் சி.வி.சண்முகம் தெரிவித்தார். இருப்பினும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்தத் திட்டத்தை ஏற்கவில்லை என்றும், அவ்வாறு செய்தால் அது விசிக ஆட்சி என்றுதான் அடையாளப்படுத்தப்படும் எனக் கூறி அவர் மறுப்புத் தெரிவித்துவிட்டதாகவும் சி.வி.சண்முகம் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.