தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் தனது பேஸ்புக்கில், ஜெயலலிதா மற்றும் பிரேமலதா ஒன்றாக நிற்பதுபோன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ள்ளார். தற்போது இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை அரசியல் கட்சிகளுக்கிடையே தீவிரமாகியுள்ளது.
சமீபத்தில் பிரேமலதா அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியை சந்தித்த நிலையில் தற்போது ஜெயலலிதா மற்றும் பிரேமலதா ஒன்றாக நிற்பதுபோன்ற புகைப்படத்தை பகிர்ந்திருப்பது அதிமுக தேமுதிக கூட்டணி உறுதியா? என கேள்வி எழுந்துள்ளது.
