விஜய் கட்சியில யாரும் மதிக்கல… அதனால திரும்ப இங்கே வராரு… இது எந்த விதத்துல நியாயம்..? அதிமுக மா.செ பசுபதி பரபரப்பு பேட்டி..!!

By Soundarya on ஆனி 14, 2026

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அண்மையில் கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேட்டியளித்துள்ள அதிமுகவின் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பசுபதி, “தவெகவின் கைக்கூலியாக சி.வி.சண்முகம் செயல்படுகிறார்; சோஃபா வந்ததும், தவெக தலைவர் விஜய் நேரில் வந்து சந்தித்ததும் உடனே அவர் தவெகவிற்கு ஆதரவு கொடுத்தார்” எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து பேசிய பசுபதி, “தற்போது தவெகவில் சி.வி.சண்முகத்தை யாரும் மதிக்காததால், மீண்டும் அதிமுகவிற்கு வருகிறேன், எனக்குப் பொறுப்பு கொடுங்கள் எனக் கேட்கிறார்; இது எவ்விதத்தில் நியாயம்?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி கடுமையாகச் சாடியுள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கும் சி.வி.சண்முகத்திற்கும் இடையிலான இந்த வார்த்தைப் போர், தமிழக அரசியல் வட்டாரத்திலும் குறிப்பாக விழுப்புரம் மாவட்ட அதிமுகவிலும் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.