தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை ஆட்சியை கைப்பற்ற பல வியூகங்களை வகுத்து வருகின்றது. இந்நிலையில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூடுகின்றது. ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளதாக இபிஎஸ் அறிவித்துள்ளார்.
