ஆட்டத்தை தொடங்கிய செங்கோட்டையன்… அதிமுகவில் இருந்து விலகிய முக்கிய புள்ளி… வெளியான பரபரப்பு அறிக்கை…!

By Nanthini on தை 5, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக இந்த தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. ஆனால் அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் உள்ளனர். அதன்படி ஈபிஎஸ்-க்கு எதிராக குரல் எழுப்பிய செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அதிமுகவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் பலரும் இபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ளன.

இப்படியான நிலையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக துணை செயலாளராக இருந்த கமாண்டோ பாஸ்கரன், திருவள்ளூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஆன இவர் நேற்று தான் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர், மாவட்டத் துணைச் செயலாளர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக பரபரப்பு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதிமுகவில் 39 ஆண்டு காலம் பயணித்து வரும் நான், கட்சியின் கொள்கைக்கும் கோட்பாட்டிற்கும் கட்டுப்பட்டு உண்மையாக கட்சி பணியாற்றி வந்தேன்.

   

ஆனால் என் போன்ற தொண்டர்களை தலைமை தொடர்ந்து புறக்கணித்து வருவது தொடர்பாக பொதுச்செயலாளரிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கட்சி வீழ்ச்சி பாதைக்கு செல்வது குறித்து கவலைப்படாமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கின்றது. எனவே என்னுடைய அடிப்படை உறுப்பினர் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவேதனைடன் விலகுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து பொங்கலுக்கு முன்னதாக பலரும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைய உள்ளதாக செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில் இவருடைய கட்சி விலகல் தற்போது அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.