திருவள்ளூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா காலத்தில் ‘ஆல் பாஸ்’ செய்யப்பட்ட மாணவர்களைக் குறிவைத்து உணர்ச்சிகரமாக உரையாற்றினார். “மாணவர்கள் ஒரு வருடம் வீணாகிவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தபோது, அவர்கள் நலன் கருதி பள்ளியில் ஆல் பாஸ் வழங்கியதும், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் மூலம் பட்டம் பெற்றுத் தந்ததும் அதிமுக அரசுதான்” என்று அவர் சுட்டிக்காட்டினார். மேலும், மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி, காலணி எனப் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய தங்களை இளைஞர்கள் மறந்துவிடக் கூடாது என அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
புதிதாக கட்சித் தொடங்கியுள்ள நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, “செடியை நட்டு, தண்ணீர் ஊற்றி, மரமாக்கிப் பலன் தரும் நிலைக்குக் கொண்டு வந்தது அதிமுக. ஆனால், இப்போது அதன் பழத்தை யாரோ ஒருவர் பறிக்க முயல்வது எந்த விதத்தில் நியாயம்?” என்று கேள்வி எழுப்பினார். எத்தனையோ சலுகைகளை அதிமுக அரசிடம் பெற்றுவிட்டு, தற்போது மற்றவர்களுக்குப் பலன் கொடுப்பது சரியாக இருக்காது என்று குறிப்பிட்ட அவர், இளைஞர்கள் வாக்களிக்கும் முன் தங்களுக்கு நன்மை செய்தவர்கள் யார் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
திரைப்பட உலகிற்கும் அரசியலுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கிய அவர், சினிமாவில் ஒருவர் 50 பேரை அடிப்பார், துப்பாக்கித் தோட்டாக்களும் அவர் மீது பாயாது, ஆனால் நிஜ வாழ்க்கை அப்படிப்பட்டது அல்ல என்று பேசினார். “திரைப்படத்தை ரசியுங்கள், ஆனால் அதோடு விட்டுவிடுங்கள்; நிஜ அரசியலை நம்பி ஏமாறாதீர்கள்” என்று எச்சரித்த அவர், 8 கோடி மக்களின் வாழ்வாதாரமான ஆட்சியைச் சரியான கைகளில் ஒப்படைக்க வேண்டும் என்றும், உணர்ச்சிவசப்பட்டு வாக்களித்து உங்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம் என்றும் இளைஞர்களிடம் கேட்டுக்கொண்டார்.
கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் பெரிய மாற்றங்கள் இன்றி ஒருவிதமான தேக்க நிலை நீடித்து வருகிறது. சர்வதேச சந்தையில்…
பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, தொகுதி மக்கள் காட்டிய அன்பால்…
ஈரானில் நடந்த அமெரிக்க எஃப்-15 (F-15) விமானப்படை வீரர்களை மீட்கும் ரகசிய நடவடிக்கையின் போது, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கட்டுப்பாட்டு…
தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்டுள்ள நேரடி அரசியல் வருகை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரம்பூர் மற்றும்…
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே விடுமுறைக்கு வந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சமையல் மாஸ்டர் போக்சோ…