தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தேசிய கட்சியான பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. பீகாரில் மாபெரும் வெற்றி பெற்ற NDA கூட்டணி அடுத்ததாக தமிழக அரசியலை எதிர்கொள்ள காத்திருக்கிறது. அதிமுக மற்றும் பாஜக இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தேர்தலை கருத்தில் கொண்டு இணைந்த இரண்டு கட்சிகள் இடையேயும் இப்போதும் கூட சில சச்சரவுகள் நிலவி வருகிறது. அதில் முக்கியமானது ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதுதான்.
கூட்டணி அமைந்ததில் இருந்தே இந்த கோரிக்கையை பாஜக முன்வைத்து வருகிறது. தமிழகத்தில் கூட்டணி என்பது வெற்றி பெறும் வரை மட்டும்தான். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற மரபே கிடையாது என அதிமுகவை சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் பாஜகவை சேர்ந்தவர்கள் அதிமுக வெற்றி பெற்றால் அங்கு பாஜகவும் ஆட்சி அமைக்கும் என்று மறைமுகமாக கூறி வந்தனர். இது தொடர்பான விவாதம் இபிஎஸ் மற்றும் பாஜக தலைமைக்கு எழுந்துள்ளது.
இந்நிலையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் இடம் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா என்பது குறித்து 2026 தேர்தலுக்குப் பிறகு பேசலாம் என்று பதிலளித்துள்ளார். அதிமுக கூட்டணி ஆட்சியை அறவே மருத்துவரும் நிலையில் பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் இது குறித்து கேள்விக்கு கூட்டணி ஆட்சி தான் என்பது போன்ற தோணியில் பதிலளித்து வருவதை ஈபிஎஸ்-க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழக அரசியலில் தவெக - காங்கிரஸ் கூட்டணியிடையே வெடித்துள்ள பிரதமர் வேட்பாளர் குறித்த வார்த்தை மோதல் தற்சமயம் பெரும் பரபரப்பை…
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள பஹேடி காவல் எல்லைக்குட்பட்ட நகரி பைபாஸ் சாலையில் நடுரோட்டில் வைத்து நடந்த…
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பிரபலமான தாமெல் பகுதியில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.…
அதிமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகச் சிறப்பாகச் செயல்பட்ட K.A. செங்கோட்டையனின் துறை விரைவில் மீண்டும் மாற்றப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியால் திமுக சுணக்கமடைந்துவிட்டது என்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தொண்டர்கள் மத்தியில் தேக்கநிலையைப் போக்கி உற்சாகத்தை…
மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜயினியில் உள்ள புகழ்பெற்ற ராம் காட் பகுதிக்கு சென்ற ஒரு பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம்…