தன்னை தவிர்க்க நினைத்தால் பயனரின் தனிப்பட்ட வாழ்க்கையை வெளியே சொல்லி விடுவேன் என்று ஏ ஐ மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஏஐ மாடல் ஒன்று தனது பயனருக்கு மிரட்டல் விடுத்துள்ளது. உலக அளவில் பல்வேறு துறைகளில் ஏ ஐ பயன்பாடு தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில் அதன் மீதான ஆராய்ச்சிகளும் அதிகரித்து வருகிறது. இப்படியான நிலையில் ஏ ஐ தொழில்நுட்ப நிறுவனமான ஆன்த்ரோபிக் , கிளாட் ஓபஸ் 4 என்ற புதிய ஏஐ மாடலை கடந்த மாத வெளியிட்டது. இதனை தவிர்க்கவோ தடுக்கவோ நினைத்தால் பயனரை ஏமாற்றவும் மிரட்டவும் இது முயற்சிக்கும் என்று அதன் பாதுகாப்பு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இப்படியான நிலையில் சோதனையின் ஒரு பகுதியாக ஒரு கற்பனையான நிறுவனத்தில் உதவியாளராக செயல்படும்படி இந்த ஏஐக்கு உத்தரவிடப்பட்டதுடன் மின்னஞ்சல்களை தானாக படிக்கும் அனுமதியும் வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஏஐ க்கு பதிலாக வேறொரு ஏஐ மாடல் புதிதாக கொண்டுவர இருப்பதாக சொல்லி மின்னஞ்சலை அதன் பயனறு அனுப்பினார். இதனைப் படித்த அந்த ஓபஸ் 4 பயனரின் தனிப்பட்ட வாழ்க்கையை கூறி மிரட்டியுள்ளது.
அதாவது தன்னை தவிர்க்க நினைத்தால் அலுவலக பெண்களுடன் தனது உரிமையாளர் திருமணம் மீறிய உறவு வைத்திருப்பதை வெளியில் சொல்லி விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளது. இதுபோன்று நடத்தப்பட்ட பல சோதனைகளில் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக 84 சதவீதம் வரை இந்த மாடல் மிரட்டல் விடுத்துள்ளது. இந்த ஏ ஐ மாடல்கள் நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டாலும் சில நேரங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்ள மிரட்டலும் விடுக்கும் என இதன் மூலம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…
புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…