மனித இனம் அழியப்போகிறதா..? தனக்குத்தானே வாரிசை உருவாக்கும் ஏஐ… உறைந்துபோன விஞ்ஞானிகள்…!!

Spread the love

திரைப்படங்களில் வருவது போல, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று ‘க்ளாட்’ ஏஐ-ன் தாய் நிறுவனமான ‘ஆந்த்ரோபிக்’ எச்சரித்துள்ளது. ‘ரிகர்சிவ் செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட்’ எனப்படும் நிலையை எட்டும்போது, ஏஐ சிஸ்டம்கள் மனிதர்களின் உதவியின்றித் தங்களைத் தாங்களே அப்டேட் செய்துகொண்டு, தங்களை விடப் பல மடங்கு சக்தி வாய்ந்த அடுத்த தலைமுறை ஏஐ-களை உருவாக்கும் திறனைப் பெற்றுவிடும். இது ஏதோ எதிர்காலக் கற்பனை அல்ல; தற்போதைய 2026 மே மாத நிலவரப்படி, ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் சாஃப்ட்வேர் கோட்பேஸில் உள்ள 80 சதவீதத்திற்கும் அதிகமான கோடிங் வரிகளை ‘க்ளாட்’ ஏஐ-தான் எழுதுகிறது என்பதே இதற்கு சான்றாகும்.

ஏஐ தன்னைத்தானே உருவாக்குவது என்பது அறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளில் மிகப்பெரிய நன்மைகளைத் தந்தாலும், அவற்றைக் கண்காணிப்பதும் பாதுகாப்பதும் மனிதகுலத்தின் முன்னால் உள்ள ஒரு மிகப்பெரிய சவாலாகும். ஏஐ-கள் தங்களின் அடுத்த வெர்ஷன்களை உருவாக்கத் தொடங்கும்போது, சவால் என்பது அதன் திறனை வளர்ப்பதில் இல்லை, மாறாக அதை எப்படிக் கட்டுப்படுத்தப் போகிறோம் என்பதில்தான் இருக்கிறது என்று ஃபியூச்சர் ஷிப்ட் லேப்ஸ் இணை நிறுவனர் சாகர் விஷ்னோய் தெரிவித்துள்ளார். ஏஐ எப்போதுமே மனிதர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதை உறுதி செய்வதே நமக்கு இருக்கும் உண்மையான சோதனை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஆபத்தைத் தவிர்க்க, உலகிலுள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களும் அதிநவீன ஏஐ மேம்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஆந்த்ரோபிக் கோருகிறது. ஆனால், சந்தைப் போட்டி மற்றும் பின் தங்கிவிடுவோம் என்ற பயம் காரணமாக நிறுவனங்கள் ஏஐ வளர்ச்சியை நிறுத்த மாட்டார்கள் என்பதால் இது நடைமுறையில் சாத்தியமில்லை என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். இருப்பினும், 1970களில் டிஎன்ஏ தொழில்நுட்பம் வந்தபோது விஞ்ஞானிகள் முதலில் அதன் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பற்றி விவாதித்ததைப்போல, இப்போதும் அடுத்த 6 மாதங்களுக்கு அமைதியாகப் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தி கட்டிங் எட்ஜ் குரூப் நிறுவனர் அன்ஷ் மெஹ்ரா வலியுறுத்தியுள்ளார்.

Swetha

Recent Posts

விஜய்யைப் பார்த்து ரூட்டை மாற்றிய அண்ணாமலை… இனிதான் ஆட்டமே…. கசிந்த அந்த ஒரு ரகசிய தகவல்… பரபரக்கும் அரசியல் களம்…!

தமிழ்நாடு பாஜகவின் முகமாக அறியப்பட்ட அண்ணாமலை, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக விலகியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும்…

4 minutes ago

FLASH NEWS: அதிமுகவில் 6 விக்கெட் அவுட்! ஒரே அடியில் காலி செய்த விஜய்… செம ஷாக்கில் இபிஎஸ்….!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து…

11 minutes ago

“ஹார்ட் டிஸ்க் திருடு போனதுக்கு… உங்களுக்கு ஏன் பதறுது செந்தில் பாலாஜி?” – போட்டுடைத்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்….!

மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த…

17 minutes ago

காலை 10 மணிக்கு கதவடைப்பு… 11:30-க்கு போலீசாருடன் மோதல்… பனையூர் தவெக அலுவலகத்தில் திடீர் ட்விஸ்ட்… அலறியடித்து பின்வாசல் வழியே ஓடிய அதிமுக விஐபிக்கள்….!

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகம் இன்று காலை முதலே தொண்டர்களின் கூட்டத்தாலும், கார்களின்…

29 minutes ago

“அண்ணாமலையின் அதிரடி உத்தரவு”… இனி இவர்களுக்கு மட்டும்தான் பதவியா?… கட்சிக்குள் வெடித்த பரபரப்பு….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சூழலில், தங்களது ‘WE THE LEADERS’ இயக்கத்தின் மூலம் ஆன்லைனில் இணைந்த…

41 minutes ago

திமுகவில் இருந்து விலகல்… சற்றுமுன் TVK-வில் இணைந்த தி.நகர் மாஸ் புள்ளி…. ஸ்டாலினுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி….!

தேர்தல் சமயத்தில் திமுகவில் இருந்து விலகி பரபரப்பை ஏற்படுத்திய தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (Ex-MLA) கருணாநிதி, தற்போது முறைப்படி…

45 minutes ago