நடிகர் சந்தானத்தின் சமீபத்திய புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்பொழுது கதாநாயகனாக கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர் சந்தானம். இவர் ‘காதல் அழிவதில்லை’ என்ற திரைப்படத்தில் நடித்து திரை உலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ‘மன்மதன்’ திரைப்படம் இவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. டைமிங் ரைமிங் காமெடிகளால் தமிழ் சினிமாவில் சிரிப்பின் நம்பிக்கை நட்சத்திரமாய் ஜொலிக்கிறார் சந்தானம்.

தல அஜித்துடன் ‘கிரீடம்’, இளைய தளபதி விஜய் உடன் ‘அழகிய தமிழ் மகன்’ என தன் காமெடியால் ரசிகர்களை சிரிக்க வைத்து விசில் அடிக்க வைத்தவர் சந்தனம். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகன்களுடன் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.

காமெடி நாயகனாக கலக்கிக் கொண்டிருந்த சந்தானம் 2014 இல் வெளியான ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இதைத் தொடர்ந்து இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு பார்ட் 1 பார்ட் 2, சபாபதி, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா 2 திரைப்படங்களில் தற்போது கதாநாயகனாக நடித்து கலக்கியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் தனது ரசிகர் ஒருவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ‘அட நம்ம சந்தனமா இது? ஆள் அடையாளம் தெரியலையே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்…..
View this post on Instagram
