உங்க வங்கி கணக்கில் இன்னும் ரூ.2000 வரலையா?.. கவலை வேண்டாம்.. தீர்வு காண இதோ எளிய வழி..!

Spread the love

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. நாட்டிலுள்ள நலிந்த விவசாயிகளுக்கு உதவுவதற்காக மத்திய மோடி அரசின் பி எம் கிஷான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 17 தவணைகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக 18 வது தவணைத் தொகை நேற்று விடுவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் வந்து விடாது. சில காரணங்களால் சிலருக்கு பணம் வராமல் கூட போகலாம். ஒருவேளை உங்களுடைய கணக்கில் பணம் வரவில்லை என்றால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். கணக்கில் பணம் மாற்றப்பட்டதா என்பது பற்றி தெரிந்து கொள்ளவும் அது குறித்து புகார் அளிக்கவும் வசதி உள்ளது.

முதலில் pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று formers corner என்ற பிரிவின் பயனாளி நிலை என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்களுடைய மொபைலில் நல்லது பதிவு எண்ணை உள்ளிட்டு Get Data என்பதை கிளிக் செய்ய வேண்டும். தற்போது பயனாளியின் நிலையில் KYC- க்கு முன் No என்று எழுதப்பட்டிருந்தால் உங்கள் தவணை பணம் இன்னும் வரவில்லை என்று அர்த்தம். உங்களுடைய கேஒய்சி புதுப்பிக்கப்படாவிட்டால் தவணை பணம் கணக்கில் வரவு வைக்கப்படாது.

நீங்கள் சரியாக பதிவு செய்து இருந்து உங்கள் கணக்கில் பணம் வரவில்லை என்றால் முதலில் அதை பற்றி புகார் அளிக்க வேண்டும். விவசாய அலுவலர் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் அல்லது 15561, 011-24300606 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். அதேபோல, மின்னஞ்சல் ஐடி மூலம் தொடர்பு கொள்ள உங்கள் புகாரை pmkisan-ict@gov.in அல்லது pmkisan-funds@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

Nanthini

Recent Posts

“ஷாக்… தேசிய கீதத்தின் போது 15 வயது இந்திய வீரருக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…

5 மணத்தியாலங்கள் ago

“‘திருமணம் பிடிக்கலனா விட்ருக்கலாம்… எதுக்கு என் மகன கொன்னீங்க…?’ – கொலை வழக்கில் மனம் உடைந்து.. கண்ணீருடன் தந்தை எழுப்பிய… நியாயமான கேள்வி…!!”

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…

5 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு செக் வைக்க சீமானை களம் இறக்குகிறதா திமுக…? அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை… பின்னணியில் மெகா கூட்டணி வியூகம்…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

5 மணத்தியாலங்கள் ago

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

6 மணத்தியாலங்கள் ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

6 மணத்தியாலங்கள் ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

6 மணத்தியாலங்கள் ago