பிக் பாஸ்க்கு பிறகு கூலான இடத்திற்கு ட்ரிப் சென்றுள்ள அர்ச்சனா.. எங்கு தெரியுமா.. வைரலாகும் போட்டோஸ்..

By Ranjith Kumar

Published on:

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 அதன் ராணியாக முடிசூட்டப்பட்டது, அர்ச்சனாவின் உக்கிரமான தைரியமும் மற்றும் அசைக்க முடியாத உறுதியும் அவர் விரும்பிய பட்டத்தை உறுதிசெய்தது, மணிச்சந்திராவை வீரம் மிக்க ரன்னர்-அப் ஆகவும், மாயாவின் இரண்டாவது ரன்னர்-அப்பாகவும் பிரகாசிக்கச் செய்தது. இந்த சீசனில் சிரிப்பு, கண்ணீர் மற்றும் நாடகம் வெளிப்பட்டது, ஆனால் இறுதியில், அர்ச்சனாவின் பயணம் இதயங்களைக் கவர்ந்து அவளுக்கு இறுதி வெற்றியைப் பெற்றுத் தந்தது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 வெற்றியாளரான அர்ச்சனாவுக்கு அதிகாரப்பூர்வ பரிசுத் தொகை ₹50 லட்சம், மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா கார் 16 லட்சம் வரை உள்ள கார் பரிசாக கிடைத்தது மற்றும் G-square விளம்பரதாரர்களிடமிருந்து ஒரு ப்ளாட்டின் மதிப்பு 15 லட்சம்.இந்த சீசனில் பிரதீப்புக்கு கெட்ட பெயர் வந்தாலும் அவர் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்ட பின் அவர் மறுபடியும் உள்ளே வர மாட்டாரா என்று எதிர்பார்த்த ரசிகர்கள் அதிகம் தான், ஆனால் அவர் வரமாட்டார் என்று தெரிந்த பின் இந்த கேமையை சூதாடி ஜெயிச்ச மாயா அல்லது அவர்கள் குழுவினர்கள் வின்னராக வருவார்கள் என்று நினைத்தார்கள்,

   

ஆனால் ஓரமாக நின்று கவனித்து இந்த பாஸில் உள்ள அனைத்து கேமையும் தெளிவாக விளையாடி அர்ச்சனா அவர்களே வின்னராக பட்டத்தை வென்றார்.இந்த சீசனின் வின்னர் ஆன அர்ச்சனா அவர்கள் பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பின் படங்கள் நடிப்பார் பல நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் பல விளம்பரங்கள் செய்து அதிகம் சம்பாதித்து கரியருக்காக பல முயற்சிகள் செய்து சினிமாவில் இடம் பிடிப்பார் என்று நினைத்தார்கள் அனைவரும், ஆனால் இங்கு நடந்ததோ வேறு ஒன்று அவர் பிக்பாஸ் சீசனை முடித்துவிட்டு அப்படியே ஹில் ஸ்டேஷன் மலைப்பகுதிகளாக இருக்கும் கொடைக்கானலுக்கு சொகுசு பயணம் சென்றுள்ளார்.

இவர் பிக் பாஸில் நூறு நாட்கள் இருந்த அழுப்பை இப்படி பயணம் மேற்கொண்டு கழிக்கிறாரோ என்னவோ, அவர் ஜெயிச்ச காசு அனைத்தும் ஊர் ஊராக சுற்றி செலவு செய்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார், தற்போது கொடைக்கானலில் தன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார், அது வைரலாகி கொண்டிருக்கிறது.

author avatar
Ranjith Kumar