ஜாலவுன் மாவட்டம் கல்பி நகரைச் சேர்ந்த காஜல் மன்சூரி, கடந்த ஜூலை 7-ஆம் தேதி தன் வீட்டை விட்டு வெளியேறி ஓம் தாக்குர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். காஜலின் தந்தை பத்லு மன்சூரி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் இருவரையும் கண்டுபிடித்தனர். இருப்பினும், தற்போது காஜல் மன்சூரி மற்றும் அவரது தந்தை பத்லு மன்சூரி ஆகிய இருவருமே ஓம் தாக்குர் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் முறைப்படி திரும்பப் பெற்றுள்ளனர்.
வழக்குகள் அனைத்தும் முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, ஓம் தாக்குர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவலை அவரே வீடியோ மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். அனைத்து சட்டப் போராட்டங்களுக்கும் முடிவு கட்டப்பட்ட நிலையில், காஜல் மன்சூரி தற்போது தனது பெற்றாருடன் மீண்டும் சொந்த வீட்டுக்கே திரும்பிச் சென்றுள்ளார்.
காதல் என்ற பெயரில் இதுபோன்று வீட்டை விட்டு ஓடிப்போய் ஆபத்தான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று இளைஞர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில், அனைத்துச் சூழல்களிலும் காஜல் மன்சூரியைப் போல பெண்கள் செயல்படுவார்கள் என்று கூற முடியாது. ஒருவேளை நீதிமன்றத்தில் நீதிபதிக்கு முன்பாக பெண் தனது வாக்குமூலத்தை மாற்றிப் பேசினால், எஞ்சிய வாழ்க்கையைச் சிறையிலேயே கழிக்க வேண்டிய அவலநிலை உருவாகிவிடும்.
