Actress Tamannaah

சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பாதிச்சா மட்டும் போதுமா? அந்த பணத்தை என்ன பண்றது…? – நடிகை தமன்னா சொன்னதை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்!

By Elango on மாசி 26, 2026

Spread the love

ஆரம்பத்தில் தமிழ் தெலுங்கு படங்களில் நடித்த நடிகை தமன்னா இப்போது இந்தி சினிமாவிலும் முன்னணி நடிகையாக மாறி இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக அடையாளம் பெற்று இருக்கிறார். சமீபத்தில் தமன்னா சொந்தமாக நகை விற்பனை கடை ஒன்றையும் துவங்கி தொழிலதிபராகவும் மாறி இருக்கிறார். சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி விளம்பரப் படங்களில் நடித்து கோடி கோடியாக வருமானம் சம்பாதிக்கிறார். இதுதவிர திருமண விழாக்கள் முக்கிய விருது விழா நிகழ்ச்சிகளில் அவர் நடனம் ஆடவும் பல கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகை தமன்னா கூறியதாவது, சினிமா பிரபலங்கள் என்னதான் கோடி கோடியாக பணம் சம்பாதித்தாலும் அதை சரியாக முதலீடு செய்து பல மடங்கு பெருக்குவது எப்படி என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். இல்லை என்றால் கடைசியில் எதுவுமே இல்லாமல் போய்விடும். எனவே சரியான முதலீடு தான் நம்மை காப்பாற்றும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். இதைக் கேட்டு ரசிகர்கள், அம்மணி நீ பொழச்சுக்குவே என்று கலாய்த்து பாராட்டி வருகின்றனர்.