தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர்தான் நடிகர் நரேன். இவருடைய இயற்பெயர் நாராயணன். சினிமாவிற்காக தன்னுடைய பெயரை நரேன் என்று மாற்றிக் கொண்டார். இவரின் தந்தை ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. தனுசுடன் இணைந்து ஆடுகளம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு ஆடுகளம் நரேன் என்ற பெயர் வந்தது. முதலில் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த இவர் நடிப்பு பயிற்சியும் மாணவர்களுக்கு எடுத்து வருகின்றார். இவர் நடித்த பல திரைப்படங்கள் இவருடைய எதார்த்தமான நடிப்பை ரசிகர்களுக்கு எடுத்துரைத்துள்ளது. அதிலும் குறிப்பாக அஞ்சாதே, ஆடுகளம், நண்பன், மனம் கொத்தி பறவை மற்றும் நையாண்டி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.

தனுஷின் நையாண்டி திரைப்படத்தில் நஸ்ரியாவின் தந்தையாக நிறைய நடித்திருப்பார். இவர் முதன்முதலில் ராமன் அப்துல்லா என்ற திரைப்படத்தில் சினிமாவில் அறிமுகமானாலும் இவருக்கு என்று ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு புகழைத் தேடித் தந்தது தனுஷின் ஆடுகளம் திரைப்படம் தான். இந்த படத்திற்கு பிறகு தான் இவர் அனைவராலும் ஆடுகளம் நரேன் என்று அழைக்கப்பட்டார். இவர் படங்களில் மட்டுமல்லாமல் சின்னத்திரை பக்கமும் பல சீரியல்களில் நடித்துள்ளார். இன்றும் இவர் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் ஆடுகளம் நரேன் சமீபத்தில் பிரபல youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜய் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அதில், விஜய் கூட ஒரு படத்துல வொர்க் பண்றது ரொம்ப சந்தோஷமா இருக்கும். அவர் அதிகமாக பேசவே மாட்டார். நாம ஏதாவது கேட்டா மட்டும் அதற்கு பதில் சொல்லிட்டு அமைதியாக இருந்து பாரு. அதே மாதிரி சூட்டிங் வந்ததும் ஏதாவது ஒரு பாட்டுக்கு ஷூட் பண்ணி வச்சிருக்கோம் ஸ்டெப்பை பார்த்துட்டு போய் அப்படியே ஆடிடுவாரு. எப்போதுமே அவர் டேக் வாங்குனது கிடையாது. எங்களுக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கும். நானும் ஒரு நாள் அவர்கிட்ட போய் எப்படி சார் கண்ணுல பார்த்ததும் அப்படியே ஆடுறீங்க உங்களால மட்டும் எப்படி முடியுது என்று கேட்டேன்.

உடனே அவரு கிண்டலா சீக்கிரமா முடிச்சுட்டா சீக்கிரம் வீட்டுக்கு போயிடலாம் என்று சொன்னாரு. சார் கிண்டல் பண்ணாம உண்மைய சொல்லுங்க என்று கேட்டதும் இத்தனை வருஷமா சினிமாவுல இருக்கோம் இது கூட பண்ணல நான் எப்படி என்று சொன்னாரு. அதே மாதிரி தான் ஒரு நாளு சார் உங்களுக்கு மட்டும் எப்படி வயசானாலும் சின்ன பையன் மாதிரி இருக்கீங்களே நாளைக்கு நாள் வயசு குறைந்து கிட்ட தான் போகுது அழகும் கூடுது என்று அவர் கிட்ட கேட்டேன். உடனே அதுக்கு அவரு கம்முனு இருங்க சார் இதுக்காக நான் எவ்வளவு கஷ்டப்படுறேன்னு எனக்கு தான் தெரியும் என்று சொன்னார் என ஆடுகளம் நரேன் விஜய் குறித்து பேசி உள்ளார்
