மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “ஷாம்பு, சோப்பால் ஆற்றில் நுரை வருதுன்னு சொன்ன அமைச்சருக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்… இது உலகமகா கண்டுப்பிடிப்பு. நான் எகிப்தை ஈஜிபுத்-னு சொன்னதுக்கு என்ன எப்படிலாம் ஓட்டுனீங்க? தெர்மாக்கோல்னுலாம் சொன்னீங்களே… அதிகாரிகள் சொல்லி ஆற்றில் தெர்மாக்கோல் விட்டதற்கும் என்னை எப்படியெல்லாமோ கிண்டல் செய்தார்கள். ஆனால், அந்த அமைச்சரை யாரும் கிண்டல் செய்யவில்லை. இதுக்குலாம் எதுவும் சொல்ல மாட்டீங்களாபா? அட என்னங்கப்பா போங்கப்பா… அழுவ விடுறீங்கப்பா.. என்றும் ஆதங்கப்பட்டார்.
நடிகர்களின் அரசியல் வருகை குறித்துப் பேசிய செல்லூர் ராஜூ, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் என்றாலும், யார் வந்தாலும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது என்றார். தனுஷைக் கண்டு தாங்கள் பயப்படவில்லை என்றும், மாறாக தவெக-வினர் தான் அவரைப் பார்த்துப் பயப்படுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், கடந்த 6 மாத கால ஆட்சியில் தவெக அரசு மிகப்பெரிய ஏமாற்றத்தையே தந்துள்ளதாகவும், மாயையில் வாக்களித்த மக்கள் தற்போது ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர் என்றும் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக தவெக அரசு மிகப்பெரிய வருத்தத்தையே அளித்துள்ளதாகத் தெரிவித்தார். விஜயிடம் மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு இந்த அரசு கடும் ஏமாற்றத்தையே பரிசளித்துள்ளதாகக் குற்றம் சாட்டிய செல்லூர் ராஜூ, தீபாவளிப் பரிசாக மக்களுக்கு ஏமாற்றத்தையும், தாங்க முடியாத விலைவாசி ஏற்றத்தையுமே இந்த அரசு வழங்கியுள்ளதாகக் கடுமையாகச் சாடினார்.
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில், சாலையில் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நபர் ஒருவரைப் பெண்மணி…
பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…