BREAKING: யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்… விஜய்யை ஆதரித்த அதிமுக எம்எல்ஏக்கள்…. இபிஎஸ் முகத்திற்கு நேராகவே சொன்ன வேலுமணி…!

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது அதிமுகவின் இரு அணிகளுக்கும் இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்தது. முன்னதாகப் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக அரசுக்கு தங்கள் கட்சி ஆதரவு அளிக்காது என்றும், சிலர் பதவி ஆசைக்காகக் கட்சித் தாவலில் ஈடுபடுவதாகவும் கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனால், சபாநாயகரின் அனுமதியோடு பேசத் தொடங்கிய எஸ்.பி. வேலுமணி, எடப்பாடியின் கருத்துக்கு மாறாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார்.

தன்னுடைய உரையில் அதிமுகவின் ஒரு பிரிவினரை வழிநடத்திப் பேசிய எஸ்.பி. வேலுமணி, “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விஜய்க்கு முழுமையான ஆதரவை வழங்குகிறது” என அறிவித்தார். குறிப்பாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை, தவெக அரசு 200 யூனிட்டாக உயர்த்தியிருப்பதைப் பாராட்டிய அவர், அம்மாவின் மக்கள் நலத் திட்டங்களை இந்த அரசு சிறப்பாக முன்னெடுப்பதாகத் தெரிவித்தார். எடப்பாடி அணியினரின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து இந்த ஆதரவை வழங்குவதாக அவர் உறுதிபடக் கூறினார்.

இந்த நிகழ்வு அதிமுகவின் உட்கட்சிப் பூசலைச் சட்டமன்றத்திலேயே வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. நேற்றைய தினமே சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான எம்எல்ஏக்கள் விஜய்யைச் சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில், இன்று சட்டமன்றத்தில் வேலுமணி அதனை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளார். “நாங்கள் பதவிக்காக ஆசைப்படுபவர்கள் கிடையாது” என்று எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த வேலுமணி, முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்குத் தனது ஆதரவை அளித்து அதிமுகவின் மற்றொரு தரப்பைத் தலைமை தாங்கி வழிநடத்தினார். இதனால் தமிழக அரசியலில் தவெக-அதிமுக கூட்டணி தொடர்பான புதிய விவாதங்கள் கிளம்பியுள்ளன.

Nanthini

Recent Posts

பள்ளி செல்ல தயாராக இருந்த 6 வயது மகன்… மாமியாருடன் ஏற்பட்ட சண்டையில்.. தாயே கொலை செய்த கொடூரம்.. உ.பியில் பயங்கரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…

7 மணத்தியாலங்கள் ago

பெங்களூருவில் அதிர்ச்சி: ஏசி (AC) ஆன் செய்யச் சொன்ன பெண் பயணிக்குக் கொலை மிரட்டல் விடுத்த கேப் டிரைவர்..!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…

7 மணத்தியாலங்கள் ago

கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லனா வீட்டை விட்டு போ..! 25 வயசானாலே கல்யாணம் தானா..? 25 வயதுப் பெண்ணின் குமுறல்: இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…

7 மணத்தியாலங்கள் ago

“டேய் என்னடா இப்படி பண்ணிட்டியே” 12 வயது மகனை ஆபீஸுக்கு கூட்டிப்போன தந்தை… கொஞ்ச நேரத்தில் அலுவலகமே எரிந்து சாம்பல்..!!

சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…

7 மணத்தியாலங்கள் ago

“ஒரு சின்ன ஓட்டைக்கு 21 ஆயிரம் ரூபாயா?” பிளம்பர் கூலியைக் கேட்டு அலறிய இந்தியப் பெண்.. அமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…

8 மணத்தியாலங்கள் ago

மகளிருக்கு குட் நியூஸ்.. ரூ.1000 வழக்கம்போல கிடைக்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…

8 மணத்தியாலங்கள் ago