“நோ சமாதானம்… நோ காம்ப்ரமைஸ்”…. எடப்பாடி பழனிசாமிக்கு சி.வி.சண்முகம் வைத்த ‘செக்’…. விடிய விடிய நடந்த ஆலோசனை…. அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு….!

Spread the love

அதிமுகவில் உட்கட்சி அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மூத்த நிர்வாகிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பாலவாக்கத்தில் உள்ள சி.வி.சண்முகம் இல்லத்தில் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் நேற்று இரவு மீண்டும் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர். தங்களுக்குப் பழைய பொறுப்புகளை மீண்டும் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு எஸ்.பி.வேலுமணி தரப்பில் இரு முறை கடிதம் எழுதியும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் இந்தச் சந்திப்பு நடந்துள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த வேலுமணி ஆதரவாளர்களிடம் சமரசமாகச் செல்ல அறிவுறுத்தப்பட்ட நிலையில், பொதுச்செயலாளர் இபிஎஸ்சுடன் இணைந்து பயணித்து மீண்டும் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளைப் பெறலாம் என வேலுமணி தரப்பு கருதியதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், எடப்பாடி பழனிசாமியுடன் இனி எவ்வித சமாதானமும் செய்யக் கூடாது என்பதில் சி.வி.சண்முகம் மிகவும் உறுதியாக இருப்பதாகக் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமரசப் போக்கைக் கடைப்பிடித்து பொறுப்புகளைப் பெறலாம் என்ற வேலுமணியின் கருத்துக்கு மாறாக, சி.வி.சண்முகம் எடுத்துள்ள இந்தத் தீவிர நிலைப்பாடு அதிமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமைக்கு எதிரான இந்த இழுபறியும் உட்கட்சிப் பூசலும் அடுத்தகட்டமாக எங்கு போய் முடியும் என்ற கேள்வி தற்போது அக்கட்சியில் வலுத்து வருகிறது.

Nanthini

Recent Posts

திக்… திக்… நான் உங்கள் மகளைக் கொன்றேன்… போனில் மாமியாருக்கு ஷாக் கொடுத்த மாப்பிள்ளை… கர்நாடகாவில் அரங்கேறிய கொடூரம்…!

கர்நாடகாவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மாப்பிள்ளை ஒருவர் தனது மாமியாரைத் தொலைபேசியில் அழைத்து, "நான் உங்கள் மகளைக் கொன்றேன்"…

6 minutes ago

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

8 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

8 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

8 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

8 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

9 மணத்தியாலங்கள் ago