இபிஎஸ் தலையில் பேரிடி… பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறும் அதிமுக?…. ஓபிஎஸ் முடிவால் திடீர் பரபரப்பு…!

By Nanthini on கார்த்திகை 25, 2025

Spread the love

பாஜக மற்றும் அதிமுக இடையே பல முரண்பாடுகள் இருந்தாலும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இரண்டு கட்சிகளும் ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து விட்டன. இரண்டு நிபதனைகளை முன்வைத்த பிறகு இபிஎஸ் பாஜக கூட்டணியில் இணைந்தார். அதில் அப்போதைய தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையை பதவி பறிக்க வேண்டும், இபிஎஸ்-க்கு எதிராக போர் கொடி தூக்கிய ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை பாஜக கூட்டணியில் இருந்து நீக்க வேண்டும். முதல் நிபதனை படி அண்ணாமலையின் பாஜக தலைவர் பதவி பறிக்கப்பட்டது. பிறகு ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் பாஜகவில் இருந்து விலகினர்.

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என ஓபிஎஸ் ஒரு பக்கமும், இபிஎஸ்ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என தினகரன் ஒரு பக்கமும் கூறி பாஜகவில் இணைய மாட்டோம் என கூறிவிட்டனர். இப்படியான நிலையில் பாஜகவில் மீண்டும் இணைய போவதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஓபிஎஸ், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். NDA கூட்டணியில் சேர்வதற்கான வேலைப்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

   

இவர்கள் மீண்டும் NDA கூட்டணியில் இணைந்தால் அதனை இபிஎஸ் ஏற்பாரா என்பது சந்தேகம்தான். இபிஎஸ்,ஓபிஎஸ் மற்றும் தினகரன் என மூவருக்கும் கடுமையான போட்டி நிலவை வரும் நிலையில் இவர்களின் இணைவு கூட்டணியில் எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. மேலும் இவர்கள் இருவரும் NDA கூட்டணியில் இணைந்தால் அதிமுக பாஜகவில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது எனவும் கூறப்படுகிறது.