தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராக ஓபிஎஸ் பதவியேற்றார். அதன் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் பதவியேற்ற நிலையில் கட்சியிலிருந்து டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இபிஎஸ்-க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இப்படியான நிலையில் அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வானதை எதிர்த்த மனு ஐகோர்ட்டில் நிராகரிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் முதன்மை உறுப்பினர்களால் நேரடியாக தேர்வு செய்வதற்கு பதிலாக பொதுக்குழுவால் இபிஎஸ் தேர்வானதை எதிர்த்து சூரியமூர்த்தி என்பவர் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். பொதுச் செயலாளர் வழக்கு முடிந்துவிட்டதாக நினைத்திருந்த இபிஎஸ்க்கு மேல்முறையீடு மீண்டும் தலைவலியை தந்துள்ளது. தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் தற்போது இந்த விவகாரம் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது
