நடுரோட்டில் பெண்ணின் கன்னத்தில் பளார் விட்ட அதிமுக முன்னாள் MLA… பட்டப்பகலில் நடந்த பயங்கரம்… பரபரப்பை கிளப்பும் வீடியோ…!

By Nanthini on மார்கழி 4, 2025

Spread the love

சேலத்தில் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் அர்ஜுனன் சேலத்தில் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிடுவதற்காக சென்று இருந்தார். அப்போது பொதுமக்களுடன் திடீரென்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு பெரும் பரபரப்பாக இருந்த நிலையில் அவர் திடீரென்று ஒரு பெண்ணை கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எப்படி ஒரு பெண்ணை அடிக்கலாம் என்று உள்ளூர் மக்கள் கேள்வி எழுப்பி அர்ஜுனனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த செயலுக்கு ஊர்மக்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்திலும் வேகமாக பரவிய நிலையில் முன்னால் அமைச்சரின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவில் அவர் ஒரு பெண்ணை அடைந்த காட்சியை தெளிவாக பதிவாகியுள்ளது. தற்போது இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அரசியல்வாதிகளில் நடத்தை குறித்து மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.