தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடி பிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் மாற்றுக் கட்சியினரை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சியின் துறையூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளார், அண்ணா திமுக கட்சி டெல்லியில் இருந்து இயங்குகிறது, அமித்ஷா வீட்டிலிருந்து கட்டுப்படுத்தப்படுகின்றது என விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, உதயநிதி ஸ்டாலின் அவர்களே, உங்களுக்கு கண்ணு தெரியலை என்றால் கண்ணாடி வாங்கித் தருகிறேன். ராயப்பேட்டையில் உள்ள அண்ணா திமுக அலுவலகம் நல்லா இருக்கிறது. நீங்கள் நேரில் வந்து பாருங்கள்.
நீங்களும் உங்க அப்பனும் சேர்ந்து அந்த அலுவலகத்தை அடித்து நொறுக்க திட்டம் போட்டீர்கள். சிலரை தூண்டிவிட்டு தாக்குதல் நடத்தினீர்கள். அதன் பெயரில் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். ஆனால் அதையும் உடைத்தது அண்ணா திமுக தானே. உதயநிதி ஸ்டாலின் யார்? திரு கருணாநிதியின் பேரன், திரு ஸ்டாலின் அவர்களின் மகன், இதனைத் தவிர வேறு எந்த உழைப்பும் இவரிடம் இல்லை. திமுகவுக்காக இவர் என்ன செய்துள்ளார்? இவரெல்லாம் நம்மைப் பற்றி பேசுகிறார். பால்டாயில் எல்லாம் நம்மைப் பற்றி பேசுகிறது, என்ன செய்யறது என்று இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
