“அடக்கி வாசிங்க தம்பி… எங்க அனுபவம் அளவிற்குகூட உங்க வயசில்லை”… பிரச்சார மேடையில் விஜய்யை கிழித்து தொங்கவிட்ட எடப்பாடி….!

By Nanthini on புரட்டாதி 25, 2026

Spread the love

மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது தமிழக வெற்றி கழகத்தையும் அதன் தலைவரையும் கடுமையாகச் சாடிய அவர், “திரையில் மட்டும் நடித்துக் கொண்டிருந்தவர், இப்போது நிஜ வாழ்விலும் நடிக்கத் தொடங்கியுள்ளார். கரூரில் 41 பேர் உயிரிழந்தபோது ஓடி ஒளிந்து சென்னையில் போய் அமர்ந்து கொண்டவர், கரூர் சம்பவம் முடிந்து 72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராதவர் எப்படி நாட்டு மக்களைக் காப்பாற்றுவார்?” என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “வார இறுதியில் உல்லாசச் சுற்றுலா சென்றுவிட்டு திங்கள்கிழமைதான் பணிக்குத் திரும்பும் மனநிலையில் சிலர் செயல்படுகிறார்கள். எங்களின் நீண்டகால அரசியல் அனுபவத்திற்குக்கூட தவெக தலைவரின் வயது போதாது; எனவே ‘தம்பி அடக்கி வாசியுங்கள்’ என்று அறிவுறுத்துகிறேன். ரீல்ஸும், போலி வாக்குறுதிகளும்தான் தவெகவின் மூலதனம். அக்கட்சி ஒரு நெல்லிக்காய் மூட்டையைப் போன்றது, விரைவில் சிதறிப்போய்விடும். வெற்றி – தோல்விகளைக் கண்டு அதிமுக என்றும் கவலைப்பட்டதில்லை; எப்போதும் மக்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் இயக்கம் இது” எனத் தெரிவித்தார்.

   

மேலும், மதுராந்தகத்தில் அதிமுகவில் வெற்றி பெற்றவர்களைக் குதிரை பேரத்தில் விலைக்கு வாங்கி தவெகவில் இணைத்துக் கொண்டு, மக்கள் மீது தேவையின்றி இடைத்தேர்தலைத் திணித்துள்ளதாக குற்றம்சாட்டினார். “ஓட்டு போட்ட மக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டு தவெகவில் சேர்ந்தவர்களுக்கு இத்தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்; மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் டெபாசிட் இழக்க வேண்டும். கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு இன்னும் முழுமை பெறவில்லை. அந்த வழக்கின் தீர்ப்பு வரும்போதுதான் தமிழகத்தில் அந்தக் கட்சி இருக்குமா, இல்லையா என்பது முடிவாகும்” என்றும் எடப்பாடி பழனிசாமி பேசினார்.