தமிழகத்தில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று தமிழகம் வந்த அமித்சாவை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சந்தித்தார். அப்போது பாஜகவிற்கு 50 தொகுதிகள் ஒதுக்க வேண்டும், கூட்டணியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை சேர்க்க வேண்டும் என்று அமித்ஷா கூறியதாக தகவல் வெளியானது. இதனிடையே இன்று எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்த நேரம் ஒதுக்காததாக கூறப்பட்டது. இதனிடையே நட்சத்திர விடுதியில் தங்கி இருந்த அமித்ஷாவை சந்திப்பதற்காக இபிஎஸ் வராமல் எஸ் பி வேலுச்சாமி மீண்டும் வந்தார்.
அந்த சமயம் அமித்ஷா கோவில்களுக்கும் மற்றும் பாஜக சார்பாக நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொள்ளவும் சென்றார். சுமார் 2 மணி நேரம் காத்திருந்த எஸ்பி வேலுமணி பிறகு அமித்ஷாவை சந்தித்து 1.45 மணி நேரம் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் மீண்டும் அமித்ஷா பாஜகவிற்கு 50 தொகுதிகள் வழங்க வேண்டும், அதில் முப்பதுக்கு மேற்பட்ட தொகுதிகள் பாஜக எந்த தொகுதியை கேட்கின்றதோ அதை தான் வழங்க வேண்டும் என்று உறுதியாக கூறியதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் கூட்டணியை பலப்படுத்த உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ஆனால் அதிமுக தரப்பில் பாஜகவுக்கு 50 தொகுதிகள் வழங்குவதற்கு விருப்பமில்லாமல் உள்ளன. அமித்ஷா வருகையால் NDA கூட்டணி மேலும் வலுவடையும் தொகுதி உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்த்து இருந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அமித்சாவை சந்திக்காததும், அதிக தொகுதிகளை கேட்டு அமித்ஷா கொடுக்கும் அழுத்தத்தாலும் தொகுதி உடன்பாடு எட்டப்படாமல் உள்ளது. இதனால் அதிமுக மற்றும் பாஜக தரப்பில் இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
