அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அதிமுக மற்றும் அமமுக ஆகிய இரு இயக்கங்களையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டியதில்லை என்றும், எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பயணிப்பதே அதிமுகவை மேலும் பலப்படுத்தும் என்றும் உறுதியாகத் தெரிவித்தார். அதிமுகவில் இருந்து விலகிச் சென்றவர்களுக்கு உடனே மீண்டும் பதவிகள் வழங்கப்படாததற்கான காரணத்தை எடப்பாடி பழனிசாமி தன்னிடம் தெளிவுபடுத்தியதாகவும், அவசரப்படாமல் பொறுமையாக இருக்க வேண்டும் என்ற அவரது கருத்து சரியானதுதான் எனத் தோன்றியதாகவும் தினகரன் குறிப்பிட்டார். மேலும், அதிமுகவின் அதிருப்தியாளர்கள் பொதுவெளியில் விமர்சனங்களை முன்வைப்பது இயக்கத்தையே பலவீனப்படுத்தும் என்று எச்சரித்த அவர், வரும் உள்ளாட்சித் தேர்தலை NDA கூட்டணியோடு இணைந்து சந்திக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தவெக தலைவர் விஜய்யின் அரசியல் அறிமுகம் மற்றும் செயல்பாடுகள் குறித்துக் கடுமையாக விமரிசித்த தினகரன், திராவிட இயக்கங்களுக்கு எதிரான விஜய்யின் பேச்சை அரசியல் வன்மத்தின் வெளிப்பாடு என்று சுட்டிக்காட்டினார். “முதல்வர் ஒரு தூய சக்தி” என்று சினிமா வசனங்களைப் பேசி அரசியலுக்கு வந்த விஜய், ஆட்சி அமைப்பதற்காக சராசரி மனிதரை விட இறங்கிவந்து அமமுக வேட்பாளரிடம் காரில் அமர்ந்து கையெழுத்து வாங்கிய நிகழ்வை நினைவு கூர்ந்தார். மேலும், விஜய்யை ஒரு “சிறந்த அரசியல் வில்லன் நடிகர்” என்று விமர்சித்த அவர், கட்சி விசுவாசிகள் இல்லாத சூழலில், ரீல் விட்டு அரசியலைத் தொடர நினைத்தால் தமிழக மக்கள் விரைவில் உரிய பாடத்தைப் புகட்டுவார்கள் என்றும், மக்கள் அவருக்குக் கொடுத்தது 108 தொகுதிகளை மட்டுமே என்றும் சாடினார்.
தமிழகத்தின் தற்போதைய ஆட்சி நிர்வாகம் மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பேசிய அவர், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது வரவேற்கத்தக்கது என்றாலும், அங்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் விவசாயம் சார்ந்த மாற்றுத் திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்றும், தற்போதைய விமான நிலையத்தையே விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். திமுக அரசு ஆறு சிலிண்டர்கள் தருவதாகக் கூறிவிட்டு வெறும் மூன்று சிலிண்டர்கள் மட்டுமே வழங்குவதாகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை நிலவும் சூழலில் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் பதவிகளுக்கு வெளி மாநிலத்தவர்களை நியமிப்பது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.
திராவிட ஆட்சிக் காலங்களில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தபோதிலும், மாநிலம் வளர்ச்சியில் முதலிடத்தில் இருந்ததைச் சுட்டிக்காட்டிய தினகரன், தற்போதைய திமுக ஆட்சியில் தமிழகம் அதளபாதாளத்திற்குச் சென்று கொண்டிருப்பதாகக் கவலை தெரிவித்தார். குறிப்பாக, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் திமுக ஆட்சியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து மக்கள் வாழ்க்கையைச் சீரழிப்பதாகக் குற்றம்சாட்டினார். இத்தகைய அசாதாரணமான அரசியல் சூழலில் தான் சட்டமன்றத்திற்குச் செல்லாமல் இருப்பதே நன்மையெனக் கருதுவதாகவும், மக்கள் எதிர்கொள்ளும் இந்தக் கொடுமையான காலத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் தனது பேச்சில் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், தலைநகர் சென்னையில் உலகத் தரம்…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், மாநிலத்தில் புதிய சட்டமன்றம் மற்றும்…
மும்பை அருகே உள்ள விரார் பகுதியில் இயங்கி வரும் பிரபல 'பார்பிகியூ நேஷன்' உணவகத்திற்கு ஆகஸ்ட் 19 அன்று யாஷ்…
மும்பை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் வேதியியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் ருசி ஆனந்த், தனது துறையின் கலாச்சார…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, தர்மபுரி பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று சௌமியா அன்புமணி கோரிக்கை விடுத்தார்.…
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள ராக்மார்ட் பகுதியில் ஹன்னா இஸ்ரேல் என்பவரது குடும்பத்தினர் 'ஹீ-ஹா' என்ற குட்டி ஆண் கழுதையைத்…