அதிமுகவின் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உடல் நலக்குறைவால் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை தரப்பிலிருந்து முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் அவருடைய உடல்நிலை குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
